விளையாட்டு
அதிகளவில் மகளிர் கிரிக்கெட்: பிசிசிஐ திட்டத்திற்கு வரவேற்பு
அதிகளவில் மகளிர் கிரிக்கெட்: பிசிசிஐ திட்டத்திற்கு வரவேற்பு
மகளிர் கிரிக்கெட் போட்டிகளை உள்நாட்டில் அதிகளவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதற்கு ஹர்மன்பீரித் கவுர், பூனம் யாதவ் ஆகிய வீராங்கனைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தலைமையில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து மகளிர் கிரிக்கெட் போட்டிகளை உள்நாட்டில் அதிகளவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கு, கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்பீரித் கவுர், பூனம் யாதவ் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மகளிர் கிரிக்கெட்டிலும் ஏ அணிகளை உருவாக்குதன் மூலம் இளம் வீராங்கனைகள் பலர் தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ள முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.