ஷிகர் தவான், கே.எல்.ராகுலுக்கு நோ சொன்ன பிசிசிஐ! கேப்டானாக ஹர்திக் பாண்டியா

ஷிகர் தவான், கே.எல்.ராகுலுக்கு நோ சொன்ன பிசிசிஐ! கேப்டானாக ஹர்திக் பாண்டியா
ஷிகர் தவான், கே.எல்.ராகுலுக்கு நோ சொன்ன பிசிசிஐ! கேப்டானாக ஹர்திக் பாண்டியா

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள் யார் யாரென பிசிசிஐ அறிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான 3 டி20போட்டிகளில், இந்திய அணியை நட்சத்திர ஆல்-ரவுண்ட் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா வழிநடத்த இருக்கிறார். ஜனவரி 3-ம் தேதி மும்பையில் தொடங்கும் இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப்பை ஏற்க உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த போட்டிகளில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் இடம்பெற போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜனவரி 10-ம் தேதி நடக்க உள்ள ஒருநாள் போட்டிகளில் ரோகித் ஷர்மா கேப்டன்ஷிப் ஏற்பாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20-களில் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும், ஒருநாள் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இருப்பாரென்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரோகித் ஷர்மா தற்போது கை விரல்களில் பட்ட காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், அதுபற்றி எந்த தகவலும் பிசிசிஐ அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. போலவே ஹர்திக் பாண்டியாவை டி20 கேப்டனாக நியமித்தது நிரந்தர மாற்றமா அல்லது இந்த ஒரு சீரிஸூக்கு மட்டுமான தற்காலிக மாற்றமா என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.

டி20 மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலுமே ரிஷப் பேண்ட் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. கடைசியாக வங்கதேச அணியுடனான டெஸ்ட் சீரிஸில் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரன்றி விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெற்றிருந்தார். சஞ்சு சாம்சன், டி20-ல் மட்டும் இருக்கிறார். கே.எல்.ராகுல் டி20-யில் இல்லையென்றபோதிலும், ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பராக இருக்கிறார்.

பிடிஐ தகவல்களின்படி, ரிஷப் பண்ட் மூட்டு வலிமைக்காக எடுக்கும் சிகிச்சைகள் பற்றி அடுத்த இரு வாரங்களுக்கு தேசிய கிரிக்கெட் ஆணையத்திடம் சமர்பிக்குமாறு அறிவுறுத்தபப்ட்டுள்ளார். ஆகவே அவர் அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெறும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பங்கெடுக்க மாட்டாரென தெரிகிறது. இருப்பினும் பிசிசிஐ அவர் ஆட்டத்தில் இருக்கிறாரா இல்லையா என அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.

ஒருநாள் போட்டியில் மிஸ் ஆகும் மற்றொரு  முக்கிய வீரர், ஷிகர் தவான். கடந்த ஆட்டங்களில் அவரின் மோசமான ரன் ரேட் காரணமாகவே இம்முறை அவர் ஆட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.

டி20-ல் வெளியாடும் இந்திய அணி வீரர்கள்:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ், சுப்மண் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மவி, முகேஷ் குமார்

ஒருநாள் போட்டியில் வெளியாடும் இந்திய அணி வீரர்கள்:

ரோகித் ஷர்மா (கேப்டன்), சுப்மண் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், மொகத். ஷமி, மொகத். சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com