சரிந்த இந்திய அணியை அதிரடியாய் மீட்ட பாண்ட்யா

சரிந்த இந்திய அணியை அதிரடியாய் மீட்ட பாண்ட்யா
சரிந்த இந்திய அணியை அதிரடியாய் மீட்ட பாண்ட்யா

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சரிந்த இந்திய அணியை பாண்ட்யா அரை சதம் அடித்து தனி ஆளாக மீட்டார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து, 286 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. முரளி விஜய்(1), ஷிகர் தவான்(16), விராட் கோலி(5) ரன்களில் ஆட்டமிழந்தனர். திருமணத்திற்குப் பின் விளையாடிய முதல் போட்டியில் 5 ரன்கள் மட்டுமே கோலி எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். 

இதனையடுத்து இரண்டாம் ஆட்டத்தை புஜாராவும், ரோகித் சர்மாவும் தொடர்ந்து விளையாடினர். ரோகித்(11), புஜாரா(26), அஸ்வின்(12), சாஹா(0) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. இதனால் இந்திய அணி 92 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின்னர் பாண்ட்யா தனி ஆளாக தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். பவுண்டரிகளாக விளாசிய அவர் 46 பந்துகளில் அரை சதம் விளாசினார். அவருக்கு துணையாக புவனேஷ்குமார் விளையாடி வருகிறார். பாண்ட்யா 81(68), புவனேஷ்குமார் 24(65) ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். 100 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்துவிடும் என்ற நிலை இருந்த போது பாண்ட்யாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 61 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com