பேட்டிங்கில் மிரட்டிய ஹர்திக் பாண்ட்யா - குஜராத் அணியை சமாளிக்குமா ராஜஸ்தான்?

பேட்டிங்கில் மிரட்டிய ஹர்திக் பாண்ட்யா - குஜராத் அணியை சமாளிக்குமா ராஜஸ்தான்?
பேட்டிங்கில் மிரட்டிய ஹர்திக் பாண்ட்யா - குஜராத் அணியை சமாளிக்குமா ராஜஸ்தான்?

24-வது லீக் போட்டியில் ராஜ்ஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

15-வது சீசன் ஐபிஎல் போட்டி, மும்பை மற்றும் புனேவில் கடந்த 26-ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. 

இந்நிலையில் இந்த தொடரில் 4-வது வெற்றியை குறிவைத்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 24-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா தலைமையிலலான குஜராத் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான மேத்யூ வேட் 12 ரன்களிலும், ஷுப்மான் கில் 13 ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். சாய் சுதர்சனுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட விஜய் சங்கர் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா, தனது அதிரடி ஆட்டத்தால், 52 பந்துகளில், 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன், 87 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய அபினவ் மனோகர் 43 ரன்னில் அவுட் ஆனார். 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளை துரத்திய டேவிட் மில்லர் 31 ரன்கள் எடுத்து வலு சேர்த்தார்.

இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 192 ரன்கள் குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணி தரப்பில் ரியான் பராக், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. துவக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். ஜோஸ்  பட்லர், 12 பந்துகளில், 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்கள் விளாசியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com