\
இதுதான் ஹர்திக் பாண்டியா மகனின் பெயரா?: இன்ஸ்டா ஸ்டோரி சொன்ன ரகசியம்!

இதுதான் ஹர்திக் பாண்டியா மகனின் பெயரா?: இன்ஸ்டா ஸ்டோரி சொன்ன ரகசியம்!

இதுதான் ஹர்திக் பாண்டியா மகனின் பெயரா?: இன்ஸ்டா ஸ்டோரி சொன்ன ரகசியம்!
Published on: 

தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பொம்மை கார் ஒன்றை பகிர்ந்துள்ள ஹர்திக், குழந்தையின் பெயரை குறிப்பிட்டுள்ளார்

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா செர்பியா நாட்டு நடிகை நடாசாவை காதலித்து வந்ததையடுத்து இருவரும்
மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து நடாசா கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸாடாகிராமில் தெரிவித்திருந்த
ஹர்திக் பாண்ட்யா விரைவில் எங்கள் உலகத்தில் இன்னொருவர் இணையப் போகிறார் எனக் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு
கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா-நடாசா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இஸ்டாவில் இதனை தெரிவித்த ஹர்திக், குழந்தையின் புகைப்படத்தையும் பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா-நடாசா தம்பதி தங்களது குழந்தைக்கு அகஸ்ட்யா என்று பெயரிட்டுள்ளனர்.

தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பொம்மை கார் ஒன்றை பகிர்ந்துள்ள ஹர்திக், அகஸ்டியாவின் முதல் கார் என பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com