"இது தந்தையின் கடமை" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது குழந்தையுடன் இருக்கும் க்யூட் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதில் ஒருநாள் தொடரில் தோற்றாலும் டி20 தொடரை வென்று அசத்தியது. இந்த இரு தொடர்களிலும் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடினார். மிக முக்கியமாக டி20 போட்டியில் அவரின் அதிரடி பேட்டிங்கால் இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாததால் அவர் இந்தியா திரும்பியுள்ளார். ஹர்திக் பாண்ட்யாவுக்கும் செர்பியா நாட்டு நடிகை நடாசாவுக்கும் திருமண நிச்சயம் முடிந்த பின்பு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஐபிஎல் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு பின்பு மும்பை திரும்பியுள்ள பாண்ட்யா தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
குழந்தைக்கு புட்டியில் பால் ஊட்டும் புகைப்படத்தை பகிர்ந்த பாண்ட்யா "அப்போது தேசியக் கடமை இப்போது தந்தைக்கான கடமை" என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த க்யூட் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.