“முன்பைவிட பலமானவனாக மாறி வருகிறேன்” - மீண்டு எழுந்த ஹர்திக் பாண்ட்யா 

“முன்பைவிட பலமானவனாக மாறி வருகிறேன்” - மீண்டு எழுந்த ஹர்திக் பாண்ட்யா 

“முன்பைவிட பலமானவனாக மாறி வருகிறேன்” - மீண்டு எழுந்த ஹர்திக் பாண்ட்யா 
Published on

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது அறுவை சிகிச்சைக்குப் பின்பு எழுந்து உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போட்டிகளில் இருந்து விலகி இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த அக்டோபர் மாதம் அறுவை சிகிக்சை நடந்தது.

அதன் பிறகு தனது அறுவை சிக்கிச்சை பற்றிய ஹர்திக் பாண்டியா மருத்துவமனையில் இருந்தபடி டவிட்டரில் தகவல் பதிவிட்டிருந்தார். அதில் “உங்களின் ஆசிர்வாதங்களுக்கு என் நன்றிகள். விரைவில் திரும்புவேன்” என்றார். வீடு திரும்பிய அவர் முதன்முறையாக எழுந்து நடை பழகும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். படிப்படியாக அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வந்தது.

இந்நிலையில், ஹர்திக் உற்சாகமான ஒரு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பெண் பயிற்சியாளர் ஒருவர் மிக இலகுவான எக்சர்சைஸ் பயிற்சிகளை அவருக்கு சொல்லித் தருகிறார். அதிக எடை இல்லாத உபகரணங்களைக் கொண்டு அவர் செய்யும் பயிற்சிகள் மிக வித்தியாசமாக உள்ளன. மேலும் அவர் தன் பதிவில், “பயிற்சியாளர் உதவியுடன் மீண்டு குணமடைந்து வருகிறேன். முன்பைக் காட்டிலும் என்னால் முடிந்தவரை அனைத்தையும் செய்து பலமானவனாக மாறி வருகிறேன். என்னை உற்சாகப்படுத்திய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com