அயர்லாந்து டி20 தொடருக்கான அணியில் ரிஷப் ஆப்சென்ட்.. ஹர்திக் பாண்டியா கேப்டன்

அயர்லாந்து டி20 தொடருக்கான அணியில் ரிஷப் ஆப்சென்ட்.. ஹர்திக் பாண்டியா கேப்டன்
அயர்லாந்து டி20 தொடருக்கான அணியில் ரிஷப் ஆப்சென்ட்.. ஹர்திக் பாண்டியா கேப்டன்

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்குபெறும் வீரர்களின் விபரத்தை இந்திய கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதியிலிருந்து, மே மாதம் 9-ம் தேதி வரை நடைபெற்ற உள்ளூர் போட்டியான ஐபிஎல் டி20 போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா, விராத் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டநிலையில், இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. காயம் காரணமாக கேப்டன் பொறுப்பிலிருந்து கே.எல். ராகுல் விலகிக் கொள்ள, இதையடுத்து கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார்.

கடந்த 9-ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒடிசாவில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதையடுத்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நாளை மறுதினம் குஜராத்தில் 4-வது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணிக்கு வாழ்வா சாவா போட்டியாக இந்தப் போட்டி அமைய உள்ளதால், இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கடைசிப் போட்டி ஜுன் 19-ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 2 போட்டிகள் டி20 தொடரில் பங்கேற்கிறது. வருகிற 26 மற்றும் 28-ம் தேதிகள் முறையே போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ரிஷப் பந்த் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியிலும் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் நடப்பாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கவனம் பெற்ற சன்ரைசர்ஸ் அணி வீரரான ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியின் வலைப்பயிற்சி 24-ம் தேதி முதல் அயர்லாந்தில் துவங்க உள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணி வீரர்கள் விபரம்:

ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), புவனேஸ்வர் குமார் (துணைக் கேப்டன்), இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com