"டி20 உலகக் கோப்பையில் அனைத்துப் போட்டிகளிலும் பந்துவீசுவேன்" - ஹர்திக் பாண்ட்யா

"டி20 உலகக் கோப்பையில் அனைத்துப் போட்டிகளிலும் பந்துவீசுவேன்" - ஹர்திக் பாண்ட்யா

"டி20 உலகக் கோப்பையில் அனைத்துப் போட்டிகளிலும் பந்துவீசுவேன்" - ஹர்திக் பாண்ட்யா
Published on

டி20 உலககக் கோப்பையின் அனைத்துப் போட்டிகளிலும் பந்துவீசுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

இலங்கை செல்லும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. முதுகில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்யவில்லை. இந்திய அணி அவரை பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்கியது. அவரால் பந்துவீச முடியாது என்றால் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் "டைம்ஸ் ஆஃப் இந்தியா"வுக்கு ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில் "டி20 உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் நான் பந்துவீசுவேன். அதற்கு முன்பு என்னால் அதனை செய்ய முடியும் என்பதை நான் உறுதி செய்திக் கொள்வேன். இப்போதைக்கு என்னுடைய முழு கவனமும் டி20 உலகக் கோப்பை மீதே இருக்கிறது. என்னால் பந்துவீச முடியும் அதனால் அதை நான் மிஸ் செய்ய மாட்டேன்" என்றார்.

மேலும் பேசிய அவர் "நான் பந்துவீச எப்போதும் ஆர்வமாகவே இருக்கிறேன். அறுவைச் சிகிச்சைக்கு பின்பும் பந்துவீச்சில் என்னுடைய வேகத்தை குறைத்துக் கொள்ளவில்லை. என்னுடைய பந்துவீச்சு என்னுடைய உடற்தகுதியை பொறுத்தே இருக்கிறது. எப்போதும் நான் 50 சதவித உடற்தகுதியுடன் விளையாட விரும்பமாட்டேன். 100 சதவிதம் உடற்தகுதி இருக்கும்போதே விளையாட விரும்புவேன்" என்றார் ஹர்திக் பாண்ட்யா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com