முகமது ஷமியை கோபமாக திட்டிய ஹர்திக் பாண்ட்யா

முகமது ஷமியை கோபமாக திட்டிய ஹர்திக் பாண்ட்யா

முகமது ஷமியை கோபமாக திட்டிய ஹர்திக் பாண்ட்யா
Published on

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமியை  ஹர்திக் பாண்ட்யா கோபமாக திட்டிய வீடியோ பெரிய வைரலாகி இருக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 21-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 162 ரன்களை சேர்த்தது. அந்த அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 50 ரன்களை குவித்தார்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் இந்த முறையும் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் ஜோடி அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 42 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 46 பந்துகளில் 57 ரன்களையும் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 129 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து பலமான நிலையில் இருந்தது.

இதன் பின்னர் வந்த நிக்கோலஸ் பூரண் அதிரடி காட்டினார். 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 34 ரன்களை விளாசினார். இதனால் 19.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த தொடரில் பெறும் முதல் தோல்வி இதுவாகும்.

முன்னதாக, ஹர்திக் பாண்ட்யா வீசிய 13வது ஓவரில் கேன் வில்லியம்சன் 2 சிக்ஸர்கள் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ராகுல் திரிபாதி அடித்த பந்து ஒன்று எட்ஜ் ஆகி மேலே பறந்தது. அப்போது டீப் பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் முகம்மது ஷமி நின்று கொண்டு இருந்தார். இவர் கொஞ்சம் முயற்சி செய்து டைவ் அடித்து இருந்தால் இந்த கேட்சை பிடித்து இருக்கலாம். ஆனால் ஷமி பந்து விழுந்த பின்தான் ஷார்ட் தேர்ட் மேன் திசையை நோக்கி ஓடி வந்தார். இதை பார்த்தும் கடுப்பான ஹர்திக் பாண்ட்யா வெளிப்படையாக முகம்மது ஷமியை களத்திலேயே திட்டினார். மூத்த வீரரான ஷமியை ஹர்திக் பாண்ட்யா கோபத்துடன் திட்டிய வீடியோ இன்று பெரிய வைரலானது .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com