ஹர்திக் அவுட்! ரிஷப் பண்ட் இன்! திடீர் மாற்றம் ஏன்? டாஸ் வென்ற ஹாங்காங் அணி பவுலிங் தேர்வு

ஹர்திக் அவுட்! ரிஷப் பண்ட் இன்! திடீர் மாற்றம் ஏன்? டாஸ் வென்ற ஹாங்காங் அணி பவுலிங் தேர்வு
ஹர்திக் அவுட்! ரிஷப் பண்ட் இன்! திடீர் மாற்றம் ஏன்? டாஸ் வென்ற ஹாங்காங் அணி பவுலிங் தேர்வு

ஆசியக் கோப்பை கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. B பிரிவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அபாரமாக விளையாடி 7 விக்கெட்டுகள் மற்றும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், ஏ பிரிவில் இருக்கும் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடந்த தனது முதல் ஆட்டத்தில் சமபலத்தில் இருக்கும் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இன்று தனது 2வது போட்டியில் இந்திய அணி இளம் வீரர்களை கொண்ட ஹாங்காங் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.

டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் நிசாகத் கான் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இந்நிலையில், இந்திய அணியில் பிளேயிங் லெவனின் ஒரு மாற்றம் செய்யப்படுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்தார். “ஹர்திக் பாண்டியா எங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் உள்ளே வருகிறார்.” என்று தெரிவித்தார் ரோகித் ஷர்மா.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

இந்திய அணி: ரோஹித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

ஹாங்காங் அணி: நிஜாகத் கான்(கேப்டன்), யாசிம் முர்தாசா, பாபர் ஹயாத், கிஞ்சித் ஷா, அய்சாஸ் கான், ஸ்காட் மெக்கெக்னி(விக்கெட் கீப்பர்), ஜீஷன் அலி, ஹாரூன் அர்ஷாத், எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, முகமது கசன்ஃபர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com