'ஹர்திக் பாண்டியா இரண்டு வீரர்களுக்கு சமமானவர்' - க்ளென் மெக்ராத் புகழாரம்

'ஹர்திக் பாண்டியா இரண்டு வீரர்களுக்கு சமமானவர்' - க்ளென் மெக்ராத் புகழாரம்
'ஹர்திக் பாண்டியா இரண்டு வீரர்களுக்கு சமமானவர்' - க்ளென் மெக்ராத் புகழாரம்

ஆஸ்திரேலியாவின் முன்னால் ஜாம்பவான் பந்துவீச்சாளரான க்ளென் மெக்ராத் சமீப காலமாக இந்திய வீரர்களை பற்றி பல நல்ல கருத்துகளை கூறி வருகிறார். இதற்கு முன்பு இந்திய இளம் பந்துவீச்சாளர்களான பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆவேஷ் கான் இருவரும் இந்திய அணிக்கு விரைவாகவே அறிமுகமானதை பெருமையாக கூறியவர் தற்போது ஹர்திக் பாண்டியா இரு வீரர்களுக்கு சமமானவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

முதுகுவலியால் அவதிபட்டு வந்த ஹர்திக் பாண்டியா கடந்த வருடம் இங்கிலாந்து நாட்டில் அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அதற்குபின் ஒரு வருடமாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபெறாமல் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா ஐபில் தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அணியை வழிநடத்தும் கேப்டனாக பங்குபெற்று அறிமுகமான முதல் ஆண்டே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 15ஆவது ஐபிஎல் கோப்பையை கொடுத்தார்.

இனி பந்துவீசமாட்டார் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் பார்மும் போய்விட்டது என்று விமர்சித்தவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பொறுப்புடன் விளையாடி ஐபிஎல் கோப்பையை பெற்றுகொடுத்தவர் இந்திய அணிக்கும் திரும்பினார். இப்போது தனது பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் ஜாம்பவான் க்ளென் மெக்ராத். இந்த சம்பவங்களால் ஜாம்பவான் க்ளென் மெக்ராத்தை இந்திய அணியின் பந்துவீச்சாளராக நியமிக்க வேண்டும் என்ற எதிபார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com