விளையாட்டு பிரலபங்கள் சீசனுக்கு ஏற்ப தங்களது ஹேர் ஸ்டைலை மாற்றுவதும், அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெருவதும் வழக்கம். சம்மர் கட், ஸ்பைக் என பல ஹேர் ஸ்டைல் வைத்து அவர்கள் கலக்குவதுண்டு. இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா தனது புது வித ஹேர் ஸ்டைலை அவரது இன்ஸ்டிராகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி தனது ஹேர் ஸ்டைலை மாற்றுவதுண்டு. அந்த வகையில், பல பிரபலங்களுக்கு முடி அலங்காரம் செய்யும் ஹக்கீம் ஆலிம் பாண்ட்யாவுக்கு புதிய ஹேர்ஸ்டைலில் முடி வெட்டியுள்ளார்.
புது ஹேர்ஸ்டைலுடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஹர்திக் பாண்டியா, “ஹக்கீம் நீங்கள் உண்மையிலேயே வித்தைக்காரர் என்று நான் சொல்வேன்... அதை நான் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.