வேறு வழியில்லை.. ஒருவழியாக பவுலிங் செய்த பாண்ட்யா!

வேறு வழியில்லை.. ஒருவழியாக பவுலிங் செய்த பாண்ட்யா!

வேறு வழியில்லை.. ஒருவழியாக பவுலிங் செய்த பாண்ட்யா!
Published on

காயம் காரணமாக பவுலிங் போடாமல் தவிர்த்து வந்த இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆஸ்திரேலியாவுடனான 2 ஆவது ஒருநாள் போட்டியில் பந்துவீசினார்.

ஆஸ்திரேலியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆகியோர் அரை சதமடித்து அவுட்டாகினர். இப்போது களத்தில் மார்னஸ் லபுஷானே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்த விக்கெட்டை வீழ்த்த இந்தியா திணறி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் பவுலிங் போடாத ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி 90 ரன்களை எடுத்தார். போட்டிக்கு பின்பு பேசிய அவர் "நான் எனது பந்து வீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். சரியான நேரம் வரும்போது பந்து வீசுவேன். எனது பந்து வீச்சில் 100 சதவீத திறனை கொண்டு வர விரும்புகிறேன். சர்வதேச அளவிற்கு தேவையான வேகத்தில் பந்து வீச விரும்புகிறேன்" என தெரிவித்தார். கடந்தாண்டு முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு பின்பு அவர் பந்துவீசவில்லை. ஐபிஎல் தொடரிலும் பந்துவீசவில்லை.

இந்நிலையில் இன்றையப் போட்டியில் விக்கெட்டுகளை எடுத்த இந்தியா திணறி வந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா 36 ஆவது ஓவரில் பந்துவீசினார். இந்திய அணி இக்கட்டான தருணத்தில் இருக்கும்போது தன்னுடைய உடல்தகுதியைப் பற்றி கவலைப்படாமல் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச வந்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com