மெரீனாவை வென்றக் கூட்டம் கோப்பையை வெல்லும் ! - ஹர்பஜன் சிங்

மெரீனாவை வென்றக் கூட்டம் கோப்பையை வெல்லும் ! - ஹர்பஜன் சிங்

மெரீனாவை வென்றக் கூட்டம் கோப்பையை வெல்லும் ! - ஹர்பஜன் சிங்
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிப் பெற்றது.  மும்பையில் நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 2 விக்கெட் வித்தியாடத்தில் வெற்றி வாகையை சூடியது. நேற்றைய போட்டியில் வாட்சன், ராயுடு, தோனி, பிராவோ ஆகியோர் சொதப்ப, டூபிளசிஸ் நின்று விளையாடி அணிக்கு வெற்றியை வசமாக்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்ததில் இருந்து, தமிழில் ட்விட் போட்டு கிறங்கடித்து வருகிறார், தமிழ் சிங் ஆகிப்போன ஹர்பஜன் சிங்.

போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஹர்பஜன் சிங் செய்துள்ள தமிழ் ட்விட் வைரலாகி வருகிறது. அதில் " விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல் நோக்கி வளரும். சென்னை மக்கள் எங்களை விதைகளாய் வித்திட்டார்கள் இன்று அரை இறுதியில் வென்று உங்கள் முன் விஸ்வரூபம் எடுத்துள்ளோம்.மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா. அறம் கூற்று சொல்லும் #நெஞ்சுக்குநீதி" என பதிவிட்டு அசத்தியுள்ளார் சிங்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com