‘முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே’ஹர்பஜன் சிங் ட்விட்!

‘முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே’ஹர்பஜன் சிங் ட்விட்!

‘முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே’ஹர்பஜன் சிங் ட்விட்!
Published on

இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். சமீப காலமாக அணியில் இடம் கிடைக்கமால் தவித்து வந்த இவரை கடந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது .இதனையெடுத்து அவர் உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக தமிழில் ட்விட் போட்டார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

பின்பு உலக மகளிர் தினதன்று ஹர்பஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்தை கவிதையாக தமிழில் பதிவிட்டு அனைவரையும்  ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனால் பஞ்சாப்பில் பிறந்த ஹர்பஜன் சிங் பச்சைத் தமிழனாக மாறிவிட்டதாக மீம்ஸ் கிரியேட்டர்கள் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து ஹர்பஜன்சிங் தந்தையர் தின வாழ்த்துகளையும் தமிழில் ட்விட் செய்தார். 

கஜா புயலால் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் என மாவட்டத்தின் பல பகுதிகளை இருந்த இடம் தெரியாமல் உருக்குலைத்து போட்டுள்ளது. கஜா புயல். தென்னை, வாழை என ஏகப்பட்ட மரங்கள் புயல் காற்றில் முறிந்து விழுந்துள்ளன. ஆடு, மாடுகள் மடிந்து கிடக்கின்றன. உருக்குலைந்துள்ள பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் "ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது. கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம்.முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே" என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு தமிழக மக்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com