“தடை செய்தது சரிதான்” - பாண்டியா குறித்து ஹர்பஜன்சிங்

“தடை செய்தது சரிதான்” - பாண்டியா குறித்து ஹர்பஜன்சிங்

“தடை செய்தது சரிதான்” - பாண்டியா குறித்து ஹர்பஜன்சிங்
Published on

இதுபோன்ற விஷயங்களை பற்றி நாங்கள் நண்பர்களுடன் கூட பேச மாட்டோம் எனவும் பிசிசிஐ தடை செய்தது சரிதான் எனவும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தனர். இதற்காக சமூக வலைத்தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்காக பிசிசிஐ அவர்கள் இருவருக்கும் விளையாடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் விராட் கோலி, முறையற்ற கருத்துகளுக்கு இங்கு இடமில்லை எனவும் பொறுப்புள்ள கிரிக்கெட் வீரர்களாக அவர்கள் கருத்தை ஆதரிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியா டுடேவுக்குப் பேட்டியளித்த ஹர்பஜன் சிங், இதுபோன்ற விஷயங்களைப் பற்றி நாங்கள் நண்பர்களுடன் கூட பேச மாட்டோம் எனவும் ஆனால் இவர்கள் பலரும் பார்க்கும் தொலைக்காட்சியில் இப்படிப் பேசியுள்ளதாகவும் விமர்சித்தார்.

மேலும் “இப்போது மக்கள் என்ன நினைப்பார்கள், ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர் எல்லோரும் இப்படித்தானோ என்றுதானே. பாண்டியா அணிக்குள் வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன? அவர் அணிக் கலாச்சாரத்தைப் பற்றி பேசுகிறார். அவர்களை விளையாடத் தடை செய்தது சரிதான். பிசிசிஐ இனியும் இப்படித்தான் சரியாக இருக்க வேண்டும். இந்தத் தடை குறித்து எனக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com