எங்களுக்கு பயம் இல்லைன்னு யாருங்க சொன்னது? ’தமிழ் சிங்’ ட்விட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்ததில் இருந்து, தமிழில் ட்விட் போட்டு கிறங்கடித்து வருகிறார், தமிழ் சிங் ஆகிப்போன ஹர்பஜன் சிங்!
இந்நிலையில் நேற்று நடந்த இந்த ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வென்றது சிஎஸ்கே. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கருண் நாயர் 54 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் 4 விக்கெட்டை வீழ்த்தினார் நிகிடி. ஷர்துல் தாகூர், பிராவோ, தலா இரண்டு விக்கெட்டுகளை வீத்தினர். பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.1 ஓவரில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 48 பந்தில் 61 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகன் விருது லுங்கி நிகிடிக்கு வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஹர்பஜன் சிங் செய்துள்ள தமிழ் ட்விட் வைரலாகி வருகிறது.
அதில், ’எங்க டீமுக்கு பயம் இல்லன்னு யாருங்க சொன்னது? அன்பை கொட்டிக்கொடுக்குற தமிழ்நாட்டுக்கு, உயிரைக் கொடுத்தாச்சு கப் ஜெயிச்சு பெருமை சேக்கணுங்கற பயம் நிறைய இருக்கு. ஒரே ஒரு ஆசை தான்,@IPL முடியும்போது "தல" கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும்’ என்று கூறியுள்ளார். இதை ஏராளமான ரசிகர்கள் லைக்கும் ஷேரும் செய்து வருகின்றனர்.