\
"செய்கை வேற ரகமா இருக்கப்போகுது" சென்னை வந்த ஹர்பஜன் ட்வீட்

"செய்கை வேற ரகமா இருக்கப்போகுது" சென்னை வந்த ஹர்பஜன் ட்வீட்

"செய்கை வேற ரகமா இருக்கப்போகுது" சென்னை வந்த ஹர்பஜன் ட்வீட்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ஹர்பஜன் சிங், ஐபிஎல் போட்டி தொடருக்கான பயிற்சியை மேற்கொள்வதற்கு சென்னை வந்துள்ளார்.

அதனை தனக்கே உரிய ஸ்டைலில் ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். சிஎஸ்கே அணியினர் மார்ச் 2 ஆம் தேதி முதல் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிஎஸ்கே கேப்டன் தோனி மார்ச் 1 ஆம் தேதி இரவே சென்னை வந்தார். அவருக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

சிஎஸ்கே அணி சார்பில் தற்போது தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், கரன் தர்மா, தீபக் சாஹர் ஆகியோர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தோனி தினமும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார், அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். சிஎஸ்கே நிர்வாகத்தினரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே பயிற்சியின் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தான் சென்னை வந்துள்ளதை ரசிகர்களுக்கு ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார், அதில் " வந்து இறங்கியிருக்குற இடம் சென்னை. இந்த ஐபிஎல் நம்ம டீம் செம "வலிமை" மாப்பி. தளபதி ஸ்டைல்ல தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெர்ல. அண்ணாத்தை பார்த்து ஆட முடியுமான்னு கேள்வி செய்கை வேற ரகமா இருக்கபோது. சேப்பாக் நம் "தலைவன்இருக்கிறான்" மயங்காதே" என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் அஜித், விஜய், ரஜினி, கமல் நடிக்கும் படங்களை தெரிவித்து ட்வீட்டாக்கியிருக்கிறார் ஹர்பஜன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com