”அவர்கள் என்ன தகுதியற்றவர்களா”-தினேஷ் கார்த்திக், தீபக் சாஹருக்காக கொந்தளித்த ஹர்பஜன் சிங்

”அவர்கள் என்ன தகுதியற்றவர்களா”-தினேஷ் கார்த்திக், தீபக் சாஹருக்காக கொந்தளித்த ஹர்பஜன் சிங்

”அவர்கள் என்ன தகுதியற்றவர்களா”-தினேஷ் கார்த்திக், தீபக் சாஹருக்காக கொந்தளித்த ஹர்பஜன் சிங்

தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக்குக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்காதது ஏன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடும் விமர்சனகளை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் முடிவடைந்தநிலையில், தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்தப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ரோகிச் சர்மா 72 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 34 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறிப்பாக மிடில் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, ஆசியகோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது. இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்தவகையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததும், அணியின் தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் காட்டம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் நல்ல வீரர்கள் தான். ஆனால், எந்தவித வடிவ கிரிக்கெட் போட்டிக்கு தேவையோ, அதற்கேற்றவாறு உள்ள வீரர்களைத்தான் தேர்வு செய்யவேண்டும்.

அணியில் அஷ்வினுக்கு திரும்பவும் வாய்ப்பு அளிக்கும்போது ஐபிஎல்லில் நன்றாக விளையாடிய பிஷ்னோய், தினேஷ் கார்த்திக்குக்கு ஏன் வாய்ப்பு அளிக்கக் கூடாது. நமது அணியில் டாப் ஆர்டர் சொதப்பினால் மிடில் ஆர்டரும் நிலைகுலைந்துப் போகிறது. 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசச்கூடிய உம்ரான் மாலிக் ஏன் இல்லை. தீபக் சாஹர் அணியில் ஏன் இடம்பெறவில்லை. வாய்ப்புகள் கிடைக்க இவர்கள் தகுதியற்றவர்களா என்று நீங்கள் கூறுங்கள்?. தினேஷ் கார்த்திக்கிற்கு ஏன் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை? ஏமாற்றம். இஷான் கிஷான், தவான் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com