’இந்து- முஸ்லிம்’ விளையாட்டு: ஹர்பஜன் சிங் ’பிஃபா’ ட்விட்!

’இந்து- முஸ்லிம்’ விளையாட்டு: ஹர்பஜன் சிங் ’பிஃபா’ ட்விட்!
’இந்து- முஸ்லிம்’ விளையாட்டு: ஹர்பஜன் சிங் ’பிஃபா’ ட்விட்!

குறைந்த அளவு மக்கள் தொகையைக் கொண்ட குரேஷியா உலகக் கோப்பை பைனலில் ஆடிக்கொண்டிருக்கும்போது 135 கோடி மக்களை கொண்ட நாம், இந்து முஸ்லிம் விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறோம்’ என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்

இவ்விரு அணிகளுக்கான போட்டி நேற்று மாஸ்கோவில் நடந்தது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியா வை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. பிரான்ஸ் அணி பெறும் இரண்டாவது சாம்பியன் பட்டம் இது. இதையடுத்து பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர், ஹர்பஜன் சிங் டிவிட்டரில் அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’50 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான குரேஷியா உலகக்கோப்பை பைனலில் விளையாடுகிறது. 135 கோடி மக்களை கொண்ட நாம் ’இந்து - முஸ்லிம்’ விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com