ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்
Published on

அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன், 23 ஆண்டு கால பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 103 டெஸ்ட், 236 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹர்பஜன் சிங் விளையாடியுள்ளார். மேலும், அனில் கும்ப்ளே, கபில்தேவ் மற்றும் ஆர்.அஷ்வினுக்குப் பின் நான்காவது அதிக விக்கெட்டுகளை(417) எடுத்தவர் ஹர்பஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com