‘உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு’: ஹர்பஜன் ட்வீட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை அணியில் தோனி,ரெய்னா, ஜடேஜா தக்கவைக்கப்பட்ட நிலையில் மற்ற வீரர்களுக்கான ஏலத்தில் சென்னை அணி பங்கேற்றது. அஸ்வினை ஏலத்தில் எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரை எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டவில்லை. மாறாக அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன், “வணக்கம் தமிழ்நாடு, உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு”என பதிவிட்டுள்ளார்.