\
அமெரிக்க கிராண்ட் ப்ரி கார் பந்தயம்: பயிற்சிப் போட்டியில் ஹாமில்டன் சாதனை

அமெரிக்க கிராண்ட் ப்ரி கார் பந்தயம்: பயிற்சிப் போட்டியில் ஹாமில்டன் சாதனை

அமெரிக்க கிராண்ட் ப்ரி கார் பந்தயம்: பயிற்சிப் போட்டியில் ஹாமில்டன் சாதனை
Published on

அமெரிக்க கிராண்ட் ப்ரி கார் பந்தயத்தின் பயிற்சிப் போட்டியில் மிகக்குறைந்த நேரத்தில் தூரத்தைக் கடந்து ஹாமில்டன் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க கிராண்ட் ப்ரீ பார்முலா ஒன் பந்தயத்தில் பிரதான சுற்றுப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி நடந்த முதல் பயிற்சிப் போட்டியில் மெர்சிடஸ் அணி வீரரான பிரிட்டனின் ஹாமில்டன் புதிய சாதனை படைத்தார். அவர் ஒரு நிமிடம் 34.66 நொடிகளில் இலக்கைக் கடந்தார். அமெரிக்க கிராண்ட் ப்ரீ கார் பந்தயத்தில் கடைசியாக நடந்த 5 போட்டிகளில், நான்கில் ஹாமில்டனே வெற்றி பெற்றுள்ளார். நடப்பு ஆண்டிற்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் போட்டியில், பிரிட்டனின் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். ஃபெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 247 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com