கே.எல்.ராகுல் அரைசதம் - பஞ்சாப் அணி 182 ரன் குவிப்பு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 182 ரன் குவித்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கெயில், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கெயில் அதிரடியாக விளையாட, ராகுல் மிகவும் நிதானமாக ஆடினார். கெயில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
அடுத்த களமிறங்கிய அகர்வாலும் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், கே.எல்.ராகுல் தொடர்ந்து நிதனாமாகதான் ஆடினர். பின்னர், மில்லரும், கே.எல்.ரகுலும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன் சேர்ந்தனர்.
கே.எல்.ராகுல் 47 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல், மில்லர் 40 ரன்னில் அவுட் ஆனார். கடைசியில், பூரான் 5, மந்தீப் சிங் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளார். இறுதியில் அஸ்வின் 4 பந்தில் 2 சிக்ஸர் உட்பட 17 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் 3 விக்கெட் சாய்த்தார்.