பாக். டி20 போட்டி: ஹபீஸ், கம்ரன் நீக்கம்!

பாக். டி20 போட்டி: ஹபீஸ், கம்ரன் நீக்கம்!

பாக். டி20 போட்டி: ஹபீஸ், கம்ரன் நீக்கம்!
Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உலக லெவன் அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அனுபவ வீரர்கள் முகமது ஹபீஸ், கம்ரன் அக்மல் நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் 2009-ம் ஆண்டு விளையாடிய போது  தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இதையடுத்து பெரிய கிரிக்கெட் அணிகள் எதுவும் பாதுகாப்பு பிரச்னைகளுக்காக, பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. 

பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஓர் அங்கமாக, செப்டம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உலக லெவன் அணி, பாகிஸ்தானில் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.

உலக லெவன் அணிக்கு தென்னாப்பிரிக்க கேப்டன், டு பிளெசிஸ் கேப்டன். இந்த அணியில் அவர் தவிர, ஆம்லா, சாமுவேல் பத்ரீ, ஜார்ஜ் பெய்லி, பால் காலிங்வுட், பென் கட்டிங், கிராண்ட் எலியட், தமிம் இக்பால், டேவிட் மில்லர், மோர்னே மோர்கெல், டிம் பெய்ன், திசர பெரேரா, இம்ரான் தாஹிர், டேரன் சமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் விளையாடும் பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மூத்த வீரர்கள் முகமது ஹபீஸ், கம்ரன் அக்மல், பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ‘சமீபத்திய ஆட்டங்களில் வீரர்களின் செயல்பாட்டை கவனித்தே, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’ என்றார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் இன்ஸ்மாம் உல் ஹக். அனுபவ வீரர்கள் முகமது ஹபீஸ், கம்ரன் அக்மல் நீக்கப்பட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com