"சேவாக் அளவுக்கு மூளை இருந்திருந்தால்": பாக். வீரர் மீது ஷோயப் அக்தர் வருத்தம் !

"சேவாக் அளவுக்கு மூளை இருந்திருந்தால்": பாக். வீரர் மீது ஷோயப் அக்தர் வருத்தம் !
"சேவாக் அளவுக்கு மூளை இருந்திருந்தால்": பாக். வீரர் மீது ஷோயப் அக்தர் வருத்தம் !

விரேந்திர சேவாக் அளவுக்கு மூளையும் புத்திசாலித்தனம் இருந்திருந்தால் இம்ரான் நசீர் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக வந்திருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிகவேகப் பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஷோயப் அக்தர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்பு வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். ஆனால் அவ்வப்போது தொலைக்காட்சிகளில் தோன்றி கிரிக்கெட் தொடர்பான சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருவார். அதுபோலவே இப்போதும் தொலைக்காட்சி பேட்டியொன்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து பேசியுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் இளம் வீரராக நம்பிக்கை நட்சத்திரமாக கருத்தப்பட்ட இம்ரான் நசீர் குறித்தும் பேசியுள்ளார், அதில் "விரேந்திர சேவாக் அளவுக்கு மூளையும், புத்திசாலித்தனமாக யோசிக்கும் திறனும் இம்ரான் நசீர் இல்லை. அதேவேளையில் இம்ரான் நசீரிடம் இருந்த திறமை சேவாக்கிடம் இல்லை. இருவரின் பேட்டிங்கை ஒப்பிட்டால் யார் சிறந்தவர்கள் என்று நமக்கே தெரியும். நான் விளையாடும் காலத்தில் இம்ரானுக்கு போதிய வாய்ப்பையும் வழங்கினோம்" என்றார் அவர்.

மேலும் தொடர்ந்த அவர், "இம்ரான் போன்ற திறமையானவர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தக்கவைத்துக்கொள்ளவில்லை. சேவாக்கை விட திறமையானவர். ஆனால் அவரிடம் சீராக ஆடும் திறனில்லை. எவ்வளவோ யோசனைகள் கூறினாலும் அதனை கேட்டுக்கொள்ளும் புத்திசாலித்தனம் இம்ரானிடம் இல்லை. கிரிக்கெட்டில் அனைத்து ஷாட்டுகளையும் ஆட திறன்பெற்றவர், நல்ல பீல்டரும் கூட. அவர் தன்னை மேம்படுத்தியிருக்கலாம். இதுபோன்ற எத்தனையோ பேரை பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறது" என்றார் ஷோயப் அக்தர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com