சூதாட்ட புகார்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்!

சூதாட்ட புகார்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்!

சூதாட்ட புகார்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்!
Published on

சூதாட்ட புகாரில் சிக்கிய, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஜோய்சா, முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் நுவான் ஜோய்சா. இவர் இலங்கை அணிக்காக 30 டெஸ்ட் மற்றும் 95 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் குணவர்த்தனே ஆறு டெஸ்ட் மற்றும் 61 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவரை இந்த வருட தொடக்கத்தில் இடைக்கால பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்திருந்தது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி 10 லீக் போட்டியில் இவர்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது இவர்கள் இருவர் மீதும் சூதாட்ட புகார் கூறப்பட்டது. இதனால் ஜோய்சா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இப்போது குணவர்த்தனேவையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இடைநீக்கம் செய்துள்ளது. தங்கள் மீதான புகாருக்கு 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com