விளையாட்டு
ரஞ்சிக் கோப்பையில் மும்பையின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்த குஜராத்
ரஞ்சிக் கோப்பையில் மும்பையின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்த குஜராத்
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் குஜராத் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பை அணியுடனான இறுதிப்போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தூரில் நடைபெற்ற போட்டியில் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி நாளில் வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய கேப்டன் பார்த்தீவ் படேல் 143 ரன்களில் வெளியேறினார். முன்னதாக முதல் இன்னிங்ஸில் மும்பை 228 ரன்களும், குஜராத் 328 ரன்களும் எடுத்தன. மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 411 ரன்கள் எடுத்தது. ரஞ்சிக்கோப்பையில் முதல் பட்டம் வென்றதை குஜராத் அணி வீரர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.