ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி - ஹாட்ரிக் வெற்றிபெறுமா?

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி - ஹாட்ரிக் வெற்றிபெறுமா?
ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி - ஹாட்ரிக் வெற்றிபெறுமா?

15-வது சீசன் ஐபிஎல் டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனேவில் கடந்த 26-ம் தேதி முதல் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 16-வது ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மோதுகின்றன.

மும்பையில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வுசெய்துள்ளார். இதையடுத்து மயங்க் அகர்வால் தலைமையிலான அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் அறிமுக அணியாக இடம் பிடித்துள்ள ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று, தற்போது ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் பஞ்சாபை சந்திக்கிறது. முதல் லீக்கில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் அணி, 2-வது லீக்கில் டெல்லியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வலிமையான பேட்டிங் வரிசை, அச்சுறுத்தும் பந்துவீச்சு என குஜராத் அணியின் ஃபெர்பார்மன்ஸ் அபாரமாக உள்ளது. 

தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 206 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் 137 ரன்னில் சுருண்டது. அதன் பிறகு அடுத்த ஆட்டத்தில் சென்னையை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எழுச்சிப் பெற்றது.  நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியதால் பஞ்சாப் வீரர்கள் இன்று கூடுதல் உத்வேகத்துடன் களம் இறங்குகின்றனர்.

பஞ்சாப் கிங்ஸ்:

மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக்கான், ஜானி பேர்ஸ்டோ, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஒடியன் ஸ்மித், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா.

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி. தர்ஷன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com