82 ரன்களுக்கு சுருண்ட லக்னோ: முதல் அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத்

82 ரன்களுக்கு சுருண்ட லக்னோ: முதல் அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத்
82 ரன்களுக்கு சுருண்ட லக்னோ: முதல் அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத்

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக, ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

புனேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் விருத்திமான் சகா 5 ரன்களிலும், அடுத்து வந்த மேத்யூ வேட் 10 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும், தொடக்க வீரராக களம் இறங்கிய ஷுப்மன் கில் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். கடைசியில் வந்த திவேத்யா சற்றே அதிரடிகாட்ட, குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. கில் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி, குஜராத் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. தீபக் ஹூடா மட்டுமே அதிகபட்சமாக 27 ரன்கள் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் மைதானத்துக்குள் செல்வதும், பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். அந்த அணி 13.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

லக்னே அணியின் ரஷித் கான் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத், நடப்பு தொடரில் 9வது வெற்றியை பதிவு செய்தது. 18 புள்ளிகள் எடுத்த அந்த அணி, நடப்பு தொடரில் முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதையும் படிக்கலாமே: ‘எனக்கு இது கஷ்டமான காலக்கட்டம், ஆனாலும்...’ - வெற்றிக்குப் பின் வெங்கடேஷ் ஐயர் உருக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com