சமபலத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான், குஜராத் - இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறுவது யார்?

சமபலத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான், குஜராத் - இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறுவது யார்?
சமபலத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான், குஜராத் - இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறுவது யார்?

15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் பிளே ஆஃப் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று பீல்டிங்கை குஜராத் அணி தேர்வு செய்துள்ளது.

நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் சூப்பர் லீக் போட்டிகள் மகாராஷ்டிராவில் முடிடைந்ததை அடுத்து, தற்போது பிளே ஆஃப் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியுறும் அணி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 27-ம் தேதி நடைபெறும் 2-வது குவாலிஃபயர் சுற்றில் விளையாட வேண்டும்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்துள்ளதார். இதையடுத்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது. அறிமுக சீசனிலேயே 20 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றில் களமிறங்குகிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்த குஜராத், இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் முதல்முறையாக ஐபிஎல் போட்டி துவங்கிய முதல் சீசனிலேயே சாம்பியனான ராஜஸ்தான் அணி, நடப்புத் தொடரில் விளையாடிய 14 ஆட்டங்களில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை தனதாக்கி பிளே ஆஃப் சுற்றை எட்டியுள்ளது. இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதிய லீக் ஆட்டத்தில் குஜராத் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைய ராஜஸ்தான் அணி கடுமையாக போராடும்.

சேஸிங்கில் குஜராத் அணி 6 முறையும், ராஜஸ்தான் அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் முதலில் பேட்டிங்கில் ராஜஸ்தான் அணி 7 முறையும், குஜராத் அணி 4 முறையும் வெற்றிபெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இரண்டு அணிகளுமே சம பலத்துடன் உள்ளன. இதற்கிடையில் கொல்கத்தாவில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், வானிலை அறிவிப்பின் படி மழையின் குறுக்கீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

குஜராத் டைட்டன்ஸ்:

ஷுப்மன் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ஆர் சாய் கிஷோர், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள்

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஜோஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com