"அப்பா ஷூ லேஸ் கட்டிவிடுங்க" வீடியோ கான்பரசிங்கை கலகலப்பாக்கிய கிரீம் ஸ்மித் மகன்!

"அப்பா ஷூ லேஸ் கட்டிவிடுங்க" வீடியோ கான்பரசிங்கை கலகலப்பாக்கிய கிரீம் ஸ்மித் மகன்!
"அப்பா ஷூ லேஸ் கட்டிவிடுங்க" வீடியோ கான்பரசிங்கை கலகலப்பாக்கிய கிரீம் ஸ்மித் மகன்!

ஆன்லைனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநரும் முன்னாள் கேப்டனுமான கிரீம் ஸ்மித்தின் மகன் செய்த குறும்புத்தனம் வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இப்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு அந்த அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதற்காக அந்த அணி பாகிஸ்தானில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தொடர் குறித்து வீடியோ கான்பரசிங் வழியாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

செய்தியாளர்கள் கேள்விக்கு சீரியஸாக பதிலளித்துக்கொண்டிருந்தார் கிரீம் ஸ்மித். அப்போது அவரின் மகன் வீடியோவில் தெரியும்படி துள்ளி குதித்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார். அப்போது அப்பா ஸ்மித்திடம் வந்து ஷூ லேஸ் கட்டிவிடும்படி கேட்டார். உடனடியாக, ஸ்மித் சிரித்துக்கொண்டே ஷூ லேஸை கட்டிவிட்டார்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் வீடியோ கான்பபிரஸிங் செய்தியாளர் சந்திப்பில் நடந்தது. இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com