“உங்கள இப்படி பார்க்க முடியல” யுவராஜ் சிங் ரசிகர்கள் உருக்கம்

“உங்கள இப்படி பார்க்க முடியல” யுவராஜ் சிங் ரசிகர்கள் உருக்கம்

“உங்கள இப்படி பார்க்க முடியல” யுவராஜ் சிங் ரசிகர்கள் உருக்கம்
Published on

இந்த ஐபிஎல் தொடரில் நிறைய நம்பிக்கை நட்சத்திரங்களும், அனுபவம் வாய்ந்த வீரர்களும் பாஃர்ம் இல்லாமல் தடுமாறினர். ஐபிஎல் தொடரின் தொடக்க கால ஆண்டுகளில் மிகவும் பிரபலமான அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் கிலென் மேக்ஸ்வெல். ஒரே ஒரு தொடரில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்தியாவிலே மேக்ஸ்வெல்லுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த அளவிற்கு மேக்ஸ்வெல் அதிரடியால் ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் 12 போட்டிகளில் விளையாடி வெறும் 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டெல்லி அணிக்காக இந்த ஆண்டு விளையாடினார். 

அதேபோல், டெல்லி அணியின் கவுதம் காம்பீர் 6 போட்டிகளில் விளையாடி வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவரது மோசமான பாஃர்ம் காரணமாக பாதி போட்டிகளுக்கு மேல் விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பும் காம்பீரிடம் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் வசம் சென்றது. இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் ஐபிஎல் தொடர்தான் காம்பீருக்கு, அவரது திறமையை காட்ட இடமாக இருந்தது. ஆனால், காம்பீர் இந்தத் தொடரில் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. 

இந்தத் தொடரில் மிகவும் மோசமான பாஃர்மால் அவதிப்பட்டவர் யுவராஜ் சிங். டி20 கிரிக்கெட்டில் அதிரடிக்கு பெயர் போனவர் யுவராஜ் சிங். 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். 12 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார். இத்தனை சாதனைகளை புரிந்த யுவராஜ் சிங்கின் ஆட்டங்கள் இந்தத் தொடரில் மிகவும் பரிதாபமாக இருந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் 8 போட்டிகளில் 85 ரன்கள் மட்டுமே எடுத்தார். இக்கட்டான பல போட்டிகளில் யுவராஜ் சொதப்பலால் வெற்றி பறிபோனது. 

இந்த ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் அஸ்வின் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது சில விமர்சனங்கள் எழுந்தன. அனுபவம் உள்ள மூத்த வீரர் யுவராஜ் சிங் இருக்கையில் அஸ்வினை கேப்டனாக நியமித்தது சரியான முடிவா? என பலரும் கேள்வி எழுப்பினர். அந்த அளவிற்கு யுவராஜ் மீது பலரும் நம்பிக்கை வைத்தனர். ஆனால், இந்தத் தொடரில் யுவராஜ் சிங்கின் மோசமான பேட்டிங் பாஃர்மை பார்த்து அவரது ரசிகர்களே மிகவும் மனமுடைந்தனர். “உங்களை இப்படி பார்க்க முடியல” என்று பலரும் ட்விட்டரில் தங்களது வருத்தங்களை பகிர்ந்தனர். இந்திய அணியிலும் இடம் இல்லாத நிலையில் யுவராஜ் சிங்கின் எதிர்காலம் தற்போது மேலும் கேள்விக் குறியாகியுள்ளது. 

இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளில் இளம் வீரர்கள் சிலரும், மூத்த வீரர்கள் சிலரும் அதிரடியாக ரசிகர்களை கவர்ந்தனர். டெல்லி அணி கடைசி இடம் பிடித்து பிளே ஆஃப்க்கு முன்னேறாவிட்டாலும் அந்த அணிக்காக விளையாடிய இளம் வீரர் ரிஷப் பந்த் 14 போட்டிகளில் 684 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல், கே.எல்.ராகுல் 659, சூர்ய குமார் யாதவ் 512, ஸ்ரேயாஸ் ஐயர் 411 என இளம் வீரர்கள் களக்கினர். கேன் வில்லியம்சன், விராட் கோலி, டிவில்லியர்ஸ், தோனி, வட்சன், ஷிகர் தவான் உள்ளிட்ட சீனியர் வீரர்களும் களக்கினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com