'ஒன்னு ஓய்வெடுங்க, இல்ல விளையாடுங்க; ரெண்டும் பண்ணாதீங்க' - கோலிக்கு உத்தப்பா அறிவுரை

'ஒன்னு ஓய்வெடுங்க, இல்ல விளையாடுங்க; ரெண்டும் பண்ணாதீங்க' - கோலிக்கு உத்தப்பா அறிவுரை
'ஒன்னு ஓய்வெடுங்க, இல்ல விளையாடுங்க; ரெண்டும் பண்ணாதீங்க' - கோலிக்கு உத்தப்பா அறிவுரை

ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் ஷுப்மான் கில்லை 3வது இடத்தில் களமிறக்கி அவரை பரிசோதிக்கலாம் என்று கூறுகிறார் ராபின் உத்தப்பா.

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை மதியம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழி நடத்தவுள்ளார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா பேட்டி ஒன்றில் கூறுகையில், ''இந்த தொடரில் ஷுப்மான் கில் தொடக்க ஆட்டக்காரராக இறங்க மாட்டார் என நினைக்கிறேன். ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரது ஜோடி இருப்பதினால் அவர்களே தொடக்க  வீரர்களாக களம் இறங்குவார்கள். ஷுப்மான் கில்லை 3வது இடத்தில் களமிறக்கி அவரை பரிசோதிக்கலாம். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடர், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றை கருத்தில்கொண்டு சில பரிட்சார்த்த முயற்சிகள் இந்த ஜிம்பாப்வே தொடரில் நடத்தப்படலாம்.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்குப் பிறகு அதிக சதங்கள் அடித்த வீரராக ஷிகர் தவான் உள்ளார். 50 ஓவர் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் தலைசிறந்த வீரர். 90 நாள் இடைவெளிக்குப் பிறகு கே.எல்.ராகுல் விளையாடுகிறார். எனவே அவரது ஃபார்ம் குறித்துப் பேசுவதற்கு சிறிது நாள்கள் செல்லட்டும். இன்னும் சில நாட்களில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அந்த தொடருக்கு தயாராகவும் கே.எல்.ராகுல் விரும்புவார். கே.எல்.ராகுல் உடல்தகுதியுடன் இருக்கும்போது அவர் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்.

விராட் கோலிக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன, ஒன்று நீங்கள் ஓய்வெடுங்கள் அல்லது அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். ஆனால் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவர் இந்த இரண்டையும் முயற்சித்துள்ளார். இது குழப்பமான மனநிலைக்கு நம்மை ஆட்படுத்தலாம். இருப்பினும் விராட் கோலியின் இருப்பு இந்திய அணிக்கு நிச்சயம் தேவை'' என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com