பெண்களைப் பெருமைப்படுத்திய கூகுள் டூடுல்

பெண்களைப் பெருமைப்படுத்திய கூகுள் டூடுல்

பெண்களைப் பெருமைப்படுத்திய கூகுள் டூடுல்
Published on

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் 11 ஆவது மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இன்று துவங்க இருப்பதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூகுளின் டூடுல் சேவை, உலகின் சில முக்கிய நிகழ்வுகள் மற்றும் பிரபலங்களை பெருமைப்படுத்தும் விதமாக வித்தியாசமான படங்களையும் அனிமேஷன் இமேஜையும் வடிவமைத்து வருகிறது. இந்த வித்தியாசமான டூடுல் மூலம் கூகுள் அதன் பயனருக்கு அந்த முக்கிய நிகழ்வுகளை நினைவு கூர்கிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் நடக்கும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. மகளிர் உலகக் கோப்பை தொடர் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் விதமாக கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com