பாகிஸ்தான் வீரர்களை கடவுள்தான் ஆசீர்வதிக்க வேண்டும் - கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி

பாகிஸ்தான் வீரர்களை கடவுள்தான் ஆசீர்வதிக்க வேண்டும் - கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி
பாகிஸ்தான் வீரர்களை கடவுள்தான் ஆசீர்வதிக்க வேண்டும் - கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி

இந்திய வீரர்கள் மற்றும் இதர நாட்டு வீரர்கள் மீது பாகிஸ்தான் வீரர்கள் விமர்சனங்களை வைத்து வருவது தொடர்பாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி பேசியுள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், சோயிப் அக்தர், வகார் யூனிஸ் ஆகியோர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது விமர்சனம் வைக்கும் வகையில் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் அவரது யூடியூப் சேனல் ஒன்றில் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் எதிர்கொண்ட மங்கி கேட் நிகழ்வையும், ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் எதிர்கொண்ட பால் டேம்பரிங் நிகழ்வையும்  ஒப்பிட்டு சிலக் கருத்துக்களை வெளியிட்டதாகத் தெரிகிறது.

இது மட்டுமன்றி பிசிசிஐ முடிவுகள் குறித்து விமர்சித்த அவர் உலக அளவில் பிசிசிஐ அதிக பணம் கொண்ட கிரிக்கெட் அமைப்பாக இருப்பதால் டி 20 போட்டிகளை ஒத்திவைப்பத்தில் பிசிசிஐ அதிக பங்கு வகிப்பதாகவும், உலக அளவிலான போட்டிகளை விட ஐபிஎல் தொடர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறினார்.

அதே போல 2010 ஆம் ஆண்டு ஸ்பாட் பிக்ஸிங் நிகழ்வில் ஈடுபட்டு, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆர்ச்சர் மீது வைத்த குற்றச்சாட்டு அதிக அளவில் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. இதேபோன்று பாகிஸ்தான் வீரர் வகார் யூனிஸ் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் உடற்கட்டுக்கோப்பை பாகிஸ்தான் வீரர்களுடன் ஒப்பிட்டு பேசினார். 

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் கருத்துகளுக்கு கண்டனம்  தெரிவிக்கும் வகையில் முன்னாள் இந்திய வீரர் “ அவர்கள் விஷயங்களை சிறிதேனும் அறிந்து பேசுவதற்கு கடவுள் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com