விளையாட்டு
கால்பந்து போட்டியில் சிலியை ஜெர்மனி வெல்லும்: பனிக்கரடி ஆரூடம்
கால்பந்து போட்டியில் சிலியை ஜெர்மனி வெல்லும்: பனிக்கரடி ஆரூடம்
கான்பெடரேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என பனிக்கரடி ஒன்று ஆரூடம் கூறியுள்ளது.
கான்பெடரேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் நாளை நடைபெற உள்ளது. சிலி மற்றும் ஜெர்மனி இடையே நடைபெறும் இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் எந்த அணி வெல்லும் என்பதை, மாஸ்கோ உயிரியல் பூங்காவில் உள்ள பனிக்கரடி ஒன்றை வைத்து ஆரூடம் பார்க்கப்பட்டது. இதில் ஜெர்மனி அணியின் பெயரைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பந்தை, பனிக்கரடி தேர்வு செய்தது. இதனால் இறுதிப்போட்டியில் ஜெர்மன் அணி தான் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையில் அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.