விளையாட்டு
உலகக்கோப்பை கால்பந்து போட்டி: நாக்அவுட் சுற்றில் ஜெர்மனி
உலகக்கோப்பை கால்பந்து போட்டி: நாக்அவுட் சுற்றில் ஜெர்மனி
பதினேழு வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
பதினேழு வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற்றுவருகிறது. இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கினியா அணியை எதிர்கொண்டது. கொச்சியில் நடந்த இந்தப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது. இதேபிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ஏற்கனவே நாக்அவுட் சுற்றை உறுதி செய்திருந்த ஈரான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணியை வென்றது.