கால்பந்து போட்டிக்காக நாயுடன் டிராக்டரில் ரஷ்யா செல்லும் ரசிகர்
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கால்பந்து ரசிகர் ஒருவர் உலகக் கோப்பை போட்டியை நேரில் காண தனது நாயுடன் டிராக்டர் வண்டியில் ரஷ்யா செல்கிறார்.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஹூபோல் விர்த். இவர் கால்பந்து போட்டியைக்காண தனது நாயுடன் ரஷ்யா செல்கிறார். அந்த நபர் தனது பயணத்துக்காக டிராக்டரில் சகல வசதிகளையும் தற்காலிகமாக ஏற்படுத்தியுள்ளார். ரஷ்யாவை சுற்றிப்பார்க்க வசதியாக சைக்கிள் ஒன்றையும் உடன் எடுத்துச் செல்கிறார். இரவு நேரத்தில் பயணம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு விளக்கு, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட சகல வசதியும் ட்ராக்டரில் ஹூபோல் விர்த் பொருத்தியுள்ளார்.
அத்துடன் தனது செல்ல நாயான ஹிஸியை விட்டுச் செல்ல மனமில்லாத அவர், அதையும் தன்னுடன் கால்பந்து போட்டியை காண அழைத்துச்செல்கிறார். ஜூன் 17ஆம் தேதி ஜெர்மனி அணி தனது முதல் ஆட்டத்தில் மெக்சிகோவை எதிர்கொள்கிறது. அதற்குள் ரஷ்யாவுக்கு சென்றடைய ஹூபோல் விர்த் திட்டமிட்டுள்ளார்.

