காதலியை தாக்கியதாக புகார்.. டென்னிஸ் வீரர் மறுப்பு

காதலியை தாக்கியதாக புகார்.. டென்னிஸ் வீரர் மறுப்பு

காதலியை தாக்கியதாக புகார்.. டென்னிஸ் வீரர் மறுப்பு
Published on

காதலியை கழுத்தை நெரித்து தாக்கியதாக வெளியான குற்றச்சாட்டை மறுத்துள்ளார் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்.

ஜெர்மனியின் வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (23). இவர் கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின்போது அலெக்சாண்டர் ஸ்வெரெவ் தன்னை கழுத்தை நெரித்து தாக்கியதாக அவரது காதலி ஓல்கா ஷரிபோவா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில் இப்புகார் குறித்து பேசிய அலெக்சாண்டர் ஸ்வரெவ், ‘’ ஓல்கா ஷரிபோவாவின் குற்றச்சாட்டு உண்மையல்ல. கழுத்தை நெரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. இது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

எங்களுக்கு ஒரு உறவு இருந்தது, ஆனால் அது வெகு காலத்திற்கு முன்பே முறிந்துவிட்டது. ஓல்கா இப்போது ஏன் இந்த குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்பது எனக்குத் தெரியாது.

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் மீண்டும் நியாயமான மற்றும் மரியாதையான முறையில் பொதுவெளியில் நடந்து கொள்வதற்கான வழியைக் கண்டுபிடிப்போம் என்று நான் நம்புகிறேன்." என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com