\
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: ஏமாற்றமளித்த இந்திய வீரர் லக்ஷயா சென் தோல்வி!

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: ஏமாற்றமளித்த இந்திய வீரர் லக்ஷயா சென் தோல்வி!

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: ஏமாற்றமளித்த இந்திய வீரர் லக்ஷயா சென் தோல்வி!
Published on

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 18-21 மற்றும் 15-21 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்து வீரர் Kunlavut Vitidsarn-வசம் தோல்வியை தழுவியுள்ளார். அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீரர் விக்டர் ஆக்சல்செனை வீழத்தியிருந்தார் லக்ஷயா சென். இருந்தும் இறுதியில் தோல்வியை தழுவியுள்ளார். 

இறுதி போட்டியில் காலின் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக லக்ஷயா சென்னுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தோல்வியை தழுவிய பிறகு இங்கிலாந்து ஓபனில் விளையாட தயாராகி வருவதாக லக்ஷயா சென் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் அந்த தொடரில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. அவருக்கு இந்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வாழ்த்து சொல்லியுள்ளார். 

இறுதி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்துள்ள லக்ஷயா சென்னுக்கு 6,840 அமெரிக்க டாலர்கள் பரிசு தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com