ஜமைக்கா அணியில் இருந்து சதத்துடன் விடைபெற்றார் கிறிஸ் கெய்ல்!
தனது கடைசி போட்டியில் சதம் அடித்து, முதல் தரப் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல். வயது 39. அதிரடி ஆட்டக்காரரான இவர், ஜமைக்கா அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடி வந்தார். இந்நிலையில் அங்கு நடந்த சூப்பர் 50 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடினார். பார்படாஸ் அணியுடன் நேற்று நடந்த போட்டி, தனது கடைசி முதல் தர போட்டி என்று அறிவித்திருந்தார். அதன்படி நேற்றைய போட்டியில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக் கப் பட்டது. வீரர்கள் ’பேட்’டை உயர்த்தி பிடித்தபடி அவருக்கு மரியாதை செய்தனர். பின்னர் அந்தப் போட்டியில் விளையாடிய அவர் 114 பந்துக ளில் 122 அடித்து மிரட்டினார். இதில் 8 சிக்சர்களும் 10 பவுண்டர்களும் அடங்கும். இவர் சதம் காரணமாக ஜமைக்கா அணி வென்றது.
‘எனது, கடைசி முதல் தர போட்டியில் சதம் அடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. போட்டியை வென்றதும் மகிழ்ச்சிதான். கடந்த 25 வருடமாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். தனிப்பட்ட முறையில் இது எனது சாதனைதான். கிரிக்கெட் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது. இனி என் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். என் குழந்தை களின் வளர்ச்சியை அவர்களுடன் இருந்து பார்க்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார் கெய்ல்.
356 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ள கிறிஸ் கெய்ல் 12,436 ரன்கள் குவித்துள்ளார். முதல் தர போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டா லும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக, உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார் கெய்ல். பல்வேறு நாடுகளில் நடக்கு ம் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்பது தொடரும் எனக் கூறியுள்ள அவர், இப்போது ஆப்கானிஸ்தானில் நடக்கும் பிரிமீயர் லீக் போட்டியில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.