தன்னை நீக்கியது தவறு என்பதை புவனேஷ்வர்குமார் நிரூபித்துள்ளார்: கவாஸ்கர்

தன்னை நீக்கியது தவறு என்பதை புவனேஷ்வர்குமார் நிரூபித்துள்ளார்: கவாஸ்கர்
தன்னை நீக்கியது தவறு என்பதை புவனேஷ்வர்குமார் நிரூபித்துள்ளார்: கவாஸ்கர்

'இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தன்னை நீக்கியது தவறு என்பதை வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் நிரூபித்துள்ளார்' என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி, ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இப்போது விளையாடிவருகிறது. 
முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது நாளில் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 5 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறும்போது, ‘இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. இரண்டு பேருக்குமே சாதகமாக பிட்ச் அமைக்கப்பட வேண்டும். இது போன்ற பிட்ச்களில் விளையாடுவதை தவிர்க்கவும் முடியாது. இந்தியாவின் புஜாராவும் தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லாவும் இதில் சிறப்பாக விளையாடினார்கள். இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தன்னை நீக்கிவிட்டு களமிறங்கியது தவறு என்பதை புவனேஷ்வர்குமார் நிரூபித்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். முகமது ஷமி, தனது சிறப்பான பந்துவீச்சை இந்தப் போட்டியில் காண்பிக்காதது துரதிர்ஷ்டமானது. அதற்காக மற்ற பந்துவீச்சாளர்களை கோலி பயன்படுத்த வேண்டியிருந்தது’ என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com