\
முச்சதம் அடித்தவருக்கு வாய்ப்பில்லையா? இந்திய அணித் தேர்வை சாடிய கவாஸ்கர்!

முச்சதம் அடித்தவருக்கு வாய்ப்பில்லையா? இந்திய அணித் தேர்வை சாடிய கவாஸ்கர்!

முச்சதம் அடித்தவருக்கு வாய்ப்பில்லையா? இந்திய அணித் தேர்வை சாடிய கவாஸ்கர்!
Published on

கருண் நாயரை விட்டுவிட்டு ஹனுமா விஹாரியை அணியில் சேர்த்ததற்கு கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார் கருண் நாயர். ஆனால் அவருக்கு எந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நேற்று தொடங்கிய கடைசி டெஸ்ட் போட்டியில், அவரை விட்டுவிட்டு ஹனுமா விஹாரியை ஆடும் லெவனில் சேர்த்துள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் காவஸ்கர் இதுகுறித்து இந்திய அணி தேர்வை கடுமையாகச் சாடியுள்ளார்.


‘இந்த டெஸ்ட் போட்டியில் கருண் நாயரை சேர்த்திருக்க வேண்டும். அவரை உங்களுக்கு (விராத்-ரவி சாஸ்திரி) பிடிக்காது என்பதால்தான் அணியில் சேர்க்கவில்லை. இந்தியாவில் இருந்து முச்சதம் அடித்தவர்கள் யார்? வீரேந்திர சேவாக் இரண்டு முறை. கருண் நாயர் ஒரு முறை. வேறு என்ன சாதிக்க வேண்டும் அவர்? ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு அவர் தகுதியானவர்.

அவருக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். ’தன்னை ஏன் சேர்க்கவில்லை? நான் என்ன தவறு செய்தேன்?’ என்பதை அணி நிர்வாகத்திடம் கேட்கும் உரிமை கருண் நாயருக்கு இருக்கிறது. அதை அவர் கேட்க வேண்டும். இருந்தாலும் விஹாரிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்’ என்றார்.

இதே போல முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, சுப்ரமணியன் பத்ரிநாத், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே உட்பட பலரும் கருண் நாயரை விட்டுவிட்டு விஹாரியை சேர்த்ததற்கு கடும் விமர்சனத்தை வைத்துள்ளனர்.
............

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com