''அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை'' - சுனில் கவாஸ்கர்

''அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை'' - சுனில் கவாஸ்கர்

''அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை'' - சுனில் கவாஸ்கர்
Published on

விராட் கோலி பிறப்பதற்கு முன்னதாகவே, இந்தியா வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ''இந்திய அணியின் வெற்றி சவுரவ் கங்குலி காலத்திலிருந்து தொடங்கியது’’ என தெரிவித்தார். இதற்கு பதிலடி தந்துள்ள கவாஸ்கர், 1970 மற்றும் 80 ஆம் ஆண்டுகளில் இந்தியா வெற்றி பெற்றதாகவும், அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலியை குறித்து சிறப்பானதை பேசுவதற்காக விராட் இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் கவாஸ்கர் கூறினார். மேலும் ''2000ஆம் ஆண்டு தான் கிரிக்கெட் தொடங்கியதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்திய அணி 70களிலேயே வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்தது. சில போட்டிகளை சமன் செய்தது'' என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com