'ஒருவரை மட்டும் கொண்டாடும் மனநிலையில் இருந்து வெளியே வாங்க' - காம்பீர் விமர்சனம்

'ஒருவரை மட்டும் கொண்டாடும் மனநிலையில் இருந்து வெளியே வாங்க' - காம்பீர் விமர்சனம்

'ஒருவரை மட்டும் கொண்டாடும் மனநிலையில் இருந்து வெளியே வாங்க' - காம்பீர் விமர்சனம்
Published on

கிரிக்கெட்டில் ஒருவர் மட்டுமே வெற்றியைப் பெற்றுக் கொடுப்பது போல் ரசிகர்கள் கொண்டாடும் கலாச்சாரத்தை முன்னாள் வீரர் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

1983ஆம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையை வென்ற பின்னர், 2011ல் இந்திய அணி சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று அசத்தியது. அந்த உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர், தோனி, சேவாக், யுவராஜ் சிங் என அனைவருமே சிறப்பாக ஆடி கோப்பையை வெல்ல உதவினர். குறிப்பாக அந்த தொடரில் கம்பீரின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 97 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கம்பீர் தான். அந்த உலக கோப்பையில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்திருந்தார் கம்பீர். 4 அரை சதங்கள் உட்பட 393 ரன்களை குவித்து, உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இந்நிலையில் 1983ல் தொடங்கி இப்போது வரையிலும் இந்திய கிரிக்கெட்டில் ஹீரோவாக ஒருவரை கொண்டாடி வருவதாகவும் அந்த கலாச்சாரத்தில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும் எனவும்  கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், ''கிரிக்கெட்டில் ஹீரோவாக ஒருவரை மட்டும் கொண்டாடுவதில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும். ஊடகங்கள் ஒருவரை தொடர்ந்து கொண்டாடும் போது காலப்போக்கில் அது பிராண்டாக மாறிவிடும். அதுதான் 1983ல் நடந்தது. 2007 மற்றும் 2011லும் நடந்தது.

இந்தியா முதல் உலகக் கோப்பையை வென்றபோது அதுபற்றிய பேச்செல்லாம் கபில்தேவ் பற்றியதுதான். 2007 மற்றும் 2011ல் உலக்கோப்பை வென்றபோது தோனி பற்றியது . இதுபோல் உருவாக்கியது யார்? ஊடகங்கள் தான் லாபத்துக்காக ஒரு சிலரை பிராண்டாக உருவாக்குகிறது. 2011 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திற்கு முன்பு சில மூத்த வீரர்கள் என்னிடம் இதுகுறித்துப் பேசினர். 1983இல் இருந்து தொடரும் இந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு நான், 'யாரையும் முடிக்க இங்கு வரவில்லை. 1983 முதல் 2011 வரை ஊடகங்கள் அவர்களுக்கு வேலை கொடுக்கிறது என்றால் அதுதான் ஊடகங்களின் பிரச்சனை. இந்த நாடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன்'' என்றார்.

இதையும் படிக்க: ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் - 15 வருட சாதனையை மகனுடன் கொண்டாடிய யுவராஜ் சிங்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com