விளையாட்டு
15 வருடத்துக்குப் பிறகு ரயிலில் பயணம் செய்த கங்குலி!
15 வருடத்துக்குப் பிறகு ரயிலில் பயணம் செய்த கங்குலி!
15 வருடத்துக்குப் பிறகு ரயிலில் பயணம் செய்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறினார்.
சவுரவ் கங்குலிக்கு மேற்கு வங்க மாநிலம் பலூர்காட்டில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. எட்டு அடி உயரம் கொண்டது இந்தசிலை. 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் சதம் அடித்தபோது கங்குலி பேட்டை உயர்த்தியபடி வந்தார். அதை உணர்த்தும் விதமாக சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள கொல்கத்தாவில் இருந்து பலூர்காட்டுக்கு கங்குலி ரயிலில் பயணம் செய்தார். பின்னர் நடந்த விழாவில் அவர் பேசும்போது, ‘கடைசியாக 2001-ல் ரயிலில் பயணம் செய்தேன். 15 வருடத்துக்கு பிறகு இன்று மீண்டும் ரயிலில் பயணம் செய்துள்ளேன்’ என்று குறிப்பிட்டார்.