சிறுத்தையை போன்றவர்கள் இந்திய மகளிர் அணி வீராங்கனைகள்: கங்குலி புகழாரம்

சிறுத்தையை போன்றவர்கள் இந்திய மகளிர் அணி வீராங்கனைகள்: கங்குலி புகழாரம்

சிறுத்தையை போன்றவர்கள் இந்திய மகளிர் அணி வீராங்கனைகள்: கங்குலி புகழாரம்
Published on

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் சிறுத்தையை போல செயல்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவையில் அகில இந்திய கண் சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் கொடிசியா வளாகத்தில் "வாக் பார் ஹெல்த்" என்ற பெயரில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கண்களை இழந்தால் அனைத்தையும் இழந்ததற்கு சமம். எனவே நம் கண்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் பேட்டியளித்த கங்குலி, “ நான் முதல்முறையாக கோவைக்கு வருகிறேன், கோவை நகரம் மிகவும் தூய்மையாக உள்ளது. கோவை எனக்கு பிடித்த நகரமும் கூட. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற நாட்டு வீரர்களை காட்டிலும் தற்போது இந்திய அணியில் உள்ள அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை தேர்வு செய்வதில் வெளிப்படையாகவே செயல்படுகிறது. சிறுத்தையை போல் இந்திய மகளிர் அணியினர் திறைமையாக விளையாடுகின்றனர். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பயிற்சியாளர் டிராவிட் தலைமையில் பல வெற்றிகளை பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மனிஷ் பாண்டே, ஹர்திக் பான்டியா போன்றவர்கள் மிகவும் திறமையாக செயல்படுகின்றனர்” என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com