இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 300 !

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 300 !

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 300 !
Published on

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 300 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி இப்போது நடந்துவருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் தினேஷ் சண்டிமால் 119 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் கேப்ரியல் 5 விக்கெட்டுகளையும் ரோச் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

(டோவ்ரிச்)

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. நேற்று மூன்றாம் ஆட்டம் நடந்தது. அந்த அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக ஸ்மித் 61 ரன்களும் டோவ்ரிச் 55 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுகளையும் ரஞ்சிதா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெரேராவின் விக்கெட்டை கேப்ரியல் வீழ்த்தினார். இன்று நான்காம் நாள் ஆட்டம் நடக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com